Press "Enter" to skip to content

அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றும் துருக்கி – எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை துருக்கி அரசு மத வழிபாட்டு தளமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது.

இஸ்தான்புல்:

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உலகின் மிகவும் பிரபலமான ஹஹியா சோபியா என்ற மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 

துருக்கி நாட்டின் மிகவும் பிரபலமான இந்த அருங்காட்சியகம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் துருக்கிக்கு சுற்றுலா வருகின்றனர்.

இந்நிலையில் ஹஹியா சோபியா அருங்காட்சியகத்தை துருக்கி அதிபர் எர்டோகன் மத வழிபாட்டு தளமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

537 ஆம் ஆண்டு ரோமானிய அரசால் கிருஸ்வத மத வழிபாட்டு தளமாக ஹஹியா சோபியா கட்டிடம் அமைக்கப்பட்டது. ரோமானிய அரசின் விழ்ச்சிக்கு பின் 1453 ஆம் ஆண்டு ஒட்டோமான் அரசர் மெஹ்மித் இந்த கட்டிடத்தை கைப்பற்றினார். இதையடுத்து சோபியா கட்டிடம் இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றப்பட்டது.

பின்னர் துருக்கியின் முதல் அதிபரான முஸ்தபா 1935 ஆம் ஆண்டு மத வழிபாட்டு தளமாக இருந்த ஹஹியா கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்றினார்.

இதையடுத்து, அந்நாட்டின் சுற்றுலா தளமாக மாறிய சோபியா அருங்காட்சியகம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஹஹியா சோபியா அருங்காட்சியகத்தை துருக்கி அதிபர் எர்டோகன் மத வழிபாட்டு தளமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களிடம் தனது செல்வாக்கை அதிகரித்து அதன் மூலம் தேர்தல் லாபத்திற்காகவே இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற அருங்காட்சியகத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக 

மாற்றுவேன் என அவர் வாக்குறிது கொடுத்துள்ளார்.  

இந்நிலையில், ஹஹியா சோபியா அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றுவதற்கு உலகின் பல்வேறு நாடுகளும், மத அமைப்புகளும் துருக்கி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹஹியா சோபியா அருங்காட்சியகம்

இதற்கிடையில், அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றும் அரசின் முடிவு தொடர்பாக அந்நாடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக இன்றும் 15 நாட்களில் தீர்ப்பு வழக்கப்படும் என அறிவித்துள்ளது.

அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்ற நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் துருக்கி அரசு உடனடியாக தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »