Press "Enter" to skip to content

காங்கோ: அதிகாரிகள் சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல் – 11 பேர் பலி

காங்கோ நாட்டில் மாகாண முன்னாள் துணைத்தலைவர் சென்ற வாகனத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் இட்டுரி மாகாணம் டிஜுஜு நகரின் மடிடி கிராமத்தில் உள்ள சாலையில் இரண்டு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இட்டுரி மாகாண முன்னாள் துணைத்தலைவர், போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட பலர் பயணம் செய்தனர்.

மடிடி கிராமத்தின் காட்டுப்பகுதியை கடந்தபோது அங்கு மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் வாகனங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாகாண துணைத்தலைவர், 4 ராணுவ வீரர்கள், 3 போலீசார் உள்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »