Press "Enter" to skip to content

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு – 27 பேர் பலி

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 27 உயிரிழந்தனர்.

நியூயார்க்:

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நாட்டின் 244-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

குறிப்பாக வார விடுமுறை நாள் என்பதால் கேளிக்கை விடுதிகளிலும், இரவு விடுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இதில் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    

அதிலும் குறிப்பாக சிகாகோ மாகாணத்தில் மட்டும் 63 பேர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நியூயார்க்கில் 41 துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

சுதந்திரதின நாளில் அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மொத்தம் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »