Press "Enter" to skip to content

செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு – யூஜிசி

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டுள்ள கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத்தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க யுஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையில், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டு பருவத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் தள்ளிவைக்கப்பட்டுள்ள கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி பருவத்தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பரிந்துரை வழங்கியுள்ளது. தேர்வுகள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ நடந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தவிர்க்கமுடியாத காரணங்களால் தேர்வு எழுத முடியாத இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு நடப்பாண்டு தேர்வுகளுக்கு

மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »