Press "Enter" to skip to content

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று கூறியுள்ளதாவது:-

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

 திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழகம் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »