Press "Enter" to skip to content

ஈரானில் சிக்கி உள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்

ஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வரும்படி வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ‘ஆபரேசன் சமுத்திர சேது’ திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வகையில் ஈரானில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் 687 பேர் மீட்கப்பட்டனர். ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ கப்பல் மூலம் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த கப்பல் கடந்த 1ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த அனைவரும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஈரானில் மேலும் 40 தமிழக மீனவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் சென்ற கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை.

அவர்கள் 40 பேரையும் விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »