Press "Enter" to skip to content

பாகிஸ்தானை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,752 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.46 லட்சத்தைக் கடந்துள்ளது.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.46 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,351 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து 12-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »