Press "Enter" to skip to content

சாத்தான்குளம் விவகாரம்- 5 காவலர்களிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது.

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய 10 பேரில்,  முதலில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் காவலில் எடுக்க சிபிஐ  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெற்றது.

சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 3 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதையடுத்து 5 போலீசாருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »