Press "Enter" to skip to content

நாளை 101-வது பிறந்தநாள் – இன்று கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் – சாதித்து காட்டிய முதியவர்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதியவர் நாளை தனது 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மருத்துவ ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் மும்பை, புனே போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

வைரஸ் அதிகமாக பரவி வந்தாலும் அதன் பாதிப்பில் இருந்து வயது வித்தியாசமின்றி பலரும் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த 100 வயது நிரம்பிய முதியவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். இதில் மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான

செய்தி என்னவென்றால் அந்த முதியவர் நாளை 101-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

மும்பையின் இந்து ஹிர்டே சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனையில் அர்ஜூன் கோவிந்த் நரிங்ரிஹர் என்ற 100 வயது நிரம்பிய முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சையின் பலனாக முதியர் அர்ஜூன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவ ஊழியர்கள் முடிவு செய்தனர். அப்போது முதியர் அர்ஜூன் இன்று தனது 100-வது வயதை பூர்த்தி செய்வது அவருக்கு நாளை 101-வது வயது பிறப்பதும் மருத்துவ ஊழியர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, முதியவர் அர்ஜூனின் 101-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு இனிப்புகளை வழங்கியும் பாடல்களை பாடியும் தங்கள் 

வாழ்த்துக்களை தெரிவித்து அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வழி அனுப்பி வைத்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »