Press "Enter" to skip to content

பொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் கணினிமய வழியாக பதிவுசெய்யலாம் – கே.பி. அன்பழகன்

பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை முதல் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.பி. அன்பழகன்  தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை  பதிவு செய்யலாம்  என்று அமைச்சர்  கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.  மேலும், ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் எனவும் கே.பி. அன்பழகன்  தெரிவித்தார்.

மேலும் அக்டோர் 15ம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு நடைமுறைகளை முடிக்க திட்டமிடபட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், விளையாட்டு பிரிவை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டும்.  “மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 52 உதவி மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளதாகவும்,  மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர்  கே.பி. அன்பழகன் தெரிவித்தார். கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்த அவர் கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »