Press "Enter" to skip to content

சாத்தான்குளம் வழக்கில் 2 நாட்களில் அறிக்கை தாக்கல் – மனித உரிமை ஆணையம்

சாத்தான்குளம் வழக்கில் 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையிலுள்ள 10 காவலர்களிடம் மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார் விசாரணை நடத்தினார்.

ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 10 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 காவலர்களும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து 10 காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவர்கள் அளித்த வாக்குமூலமும், காவலர்கள் அளித்த வாக்குமூலமும் ஒத்துப்போனது.

சாத்தான்குளம் வழக்கில்  2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »