Press "Enter" to skip to content

மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை – நாளை தொடங்குகிறது எய்ம்ஸ்

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை முயற்சியை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் நாளை முதல் தொடங்க உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசியை உருவாக்கும் வேலையில் உலகின் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி 

மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவும் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கும் வேலையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளை சோதனை முயற்சிகயாக மனிதர்களுக்கு செலுத்தும் வேலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் கொரோனா தடுப்பூசியான கோவேக்சினை உருவாக்கியுள்ளது. இந்த கோவேக்சினை சோதனை முயற்சியாக மனிதர்களுக்கு செலுத்த எய்ம்ஸ் நெறிமுறைக்குழு நேற்று அனுமதி வழங்கியது.

இதையடுத்து நாளை முதல் முதல் கட்டமாக கோவேக்சினை சோதனை முயற்சியாக மனிதர்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வளர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 வயது நிரம்பிய தன்னார்வளர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு எந்த வித நோயும் இல்லாமல் பூரண உடல் நடத்துடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு நடைமுறை திங்கள்கிழமை முதல் நடைபெறும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சஞ்ஜெய் ராய் தெரித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »