Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு பணிகள்- முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 6-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,00,937 பேரும், தமிழகத்தில் 1,65,714 பேரும், டெல்லியில் 1,21,582, கர்நாடகத்தில் 59,652 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் நாளொன்றுக்கு 48,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கொரோனாவை தடுக்க தமிழக அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »