Press "Enter" to skip to content

சுபாஷ் சந்திரபோஸின் ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும்: ம.பி. காங்கிரஸ் தலைவர்

துரோகம் செய்யும் எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸின் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. 22 எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

அது மட்டுமல்லால் தற்போது இரண்டு வாரத்திற்கு மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்து விட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.-க்கள் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் துரோகம் செய்யும்போது சுபாஷ் சந்திர போஸின் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச மீடியாத்துறை தலைவரும், எம்.எல்.ஏ.-வும் ஆன ஜித்து பத்வாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜித்து பத்வாரி கூறுகையில் ‘‘காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கோபமாக உள்ளனர். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் விலைபோனது குறித்து கேள்வி கேட்க இருக்கிறார்கள். அவர்கள் (துரோகிகள்) பாடம் கற்றுக்கொள்ளவில்லை எ்றல், சுபாஷ் சந்திர போஸின் ஜனநாயக ஆயுதத்தை எடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்றவர்கள் காங்கிரஸ் தொண்டர்களால் காப்பாற்றப்பட மாட்டார்கள்’’ என்றார்.

203 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 27 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. பா.ஜனதா 107 இடங்களுடன் ஆட்சியில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »