Press "Enter" to skip to content

ராஜஸ்தானில் உண்மை வெளிப்பட ஆளுநர் சட்டசபையை கூட்ட வேண்டும்: ராகுல் காந்தி

உண்மை வெளிப்பட ராஜஸ்தான் சட்டசபையை கவர்னர் உடனடியாக கூட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இது அசோக் கெலாட்டிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நேற்று இரவு கவர்னரை சந்தித்து சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும். அங்கு பலத்தை நிரூபிக்க இருக்கிறேன் என்றார். ஆனால் கவர்னர் சட்டசபையை கூட்ட அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் சட்டசபையை கூட்ட சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாடு அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் ஆளப்பட்டு வருகிறது. மக்களின் ஆணைப்படி அரசு உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜதனா சதி செய்து வருவது தெளிவாகியுள்ளது. இது ராஜஸ்தானின் 8 கோடி மக்களையும் அவமானம் படுத்துவதாகும். நாட்டிற்கு முன்பாக உண்மை வெளிப்பட கவர்னர் உடனடியாக சட்டசபையை கூட்ட அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »