Press "Enter" to skip to content

ஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் – ராகுல் காந்தி

ஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி:

ஜனநாயகத்தைக் காக்க நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வரும்  சூழலில், பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் செய்ததைப்போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதை  பா.ஜ.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்காக பேசுங்கள் #SpeakUpForDemocracy என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »