Press "Enter" to skip to content

முகக்கவசம் அணிவதை தவிர்த்த மக்கள் – அபராதத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திய குஜராத் அரசு

குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்பட்டிருந்த ரூ.200 அபராதத்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காந்திநகர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் முகக்கவசம் அணிவது முக்கியமான நடைமுறையாக உள்ளது. முக்ககவசம் அணிவது மூலம் வைரஸ் பரவுவதை தடுக்கமுடியும் என தெரியவந்துள்ளதால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

ஆனாலும், பொதுமக்களில் சிலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வைரஸ் பரவ வழிவகை செய்யும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு செயல்படுபவர்களை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், குஜராத் மாநிலத்திலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இதுவரை 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வைரஸ் வேகமாக பரவ காரணமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிய குஜராத் அரசு அதை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகையையும் உயர்த்தியுள்ளது. அதன்படி மாநிலத்தில் முக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தொகை உயர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என குஜராத் முதல்மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »