Press "Enter" to skip to content

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவமான கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே முக்கிய காரணியாக விளங்குவதால் ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்படி இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்துகாந்தகஷாயம் திருவில்லியம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் டாக்டர்கள் அறிவுரையின்படி உட்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »