Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 38,135 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 50 ஆயிரத்துக்கு மேல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.

மொத்த பாதிப்பு 17 லட்சத்தை தாண்டிய மறுநாளே 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 771 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில், அதிக அளவாக மராட்டிய மாநிலத்தில் 260 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் விகிதம் 2.11 சதவீதம் ஆகும்.

மராட்டியத்தில் அதிக அளவாக 15 ஆயிரத்து 576 பேர் மரணமடைந்துள்ளனர். அதையடுத்து, தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

அதே சமயத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 574 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இத்துடன், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 65.77 சதவீதமாக உள்ளது.

தற்போது, 5 லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 70 சதவீதத்துக்கு மேற்பட்ட மரணங்கள், பிற நோய்களால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »