Press "Enter" to skip to content

அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் பூஜை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டினார்.

அயோத்தி:

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில்  பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. குமரி முதல் நாடு முழுவது ராமர் நாமம் ஒலிக்கிறது.

பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.

தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல் பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது.

ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். நேபாளத்துக்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது.

ராமர் கோவில் கட்டுவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராம ராஜ்ஜியமே மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »