Press "Enter" to skip to content

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும், அதில் மாற்றமில்லை என்று மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.

* தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

* திண்டுக்கல்லில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 9,105 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளது.

* திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலம் திண்டுக்கல்லில் 400 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தொழில் தொடக்கம்

* 2019 முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 நிறுவனங்கள் ரூ.300 கோடியில் திண்டுக்கல்லில் தொழில் தொடங்க உள்ளன

* தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்; அதில் மாற்றமில்லை

* இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் கூடுதலாக ஒரு குழு என 2 குழு அமைப்பு

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? அவர் முதலில் எந்த கட்சி? என்றும், பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »