Press "Enter" to skip to content

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி- முதலமைச்சர்

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நெல்லை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

* விவசாயிகள், தொழில் துறையினர் வைத்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்

* கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

* நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

* நெல்லை மாநகருக்கான அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்

* நெல்லை மாநகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன

* தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு அரசு சார்பில் சலுகை வழங்கப்படுகிறது

* பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது

* தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »