Press "Enter" to skip to content

கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- பிரதமர் மோடி

கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.

விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. ஆனால் ஓடுதளத்தையும் தாண்டி விமான நிற்காமல் சென்றது. இதனால் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

தற்போது வரை விமானி உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. மீட்டுப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்:-

“கேரள விமான  விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் களத்தில் அதிகாரிகள் நிற்கிறார்கள் மீட்பு பணிகள் விரைவாக நடக்கின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள்.

இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »