Press "Enter" to skip to content

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வந்தார். கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் டோனி அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஐ.பி.எல். போட்டியின் மூலம் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த போட்டி காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டு இருப்பதால் டோனியின் மறுபிரவேசம் கேள்விக்குறியாகி இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது.

ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர் தோனி விளையாடி  விளையாடுவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.   

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.  மேலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.

2004ல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் அறிமுகமானார் தோனி.  39 வயதான மகேந்திரசிங் தோனி , 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.  350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,773 ரன்கள் சேர்த்துள்ளார்.  98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும் சேர்த்துள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »