Press "Enter" to skip to content

சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கணிப்பொறி உபகரணங்கள் உள்ளிட்ட 5 பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்:

வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது டிக் டாக் செயலி என அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

இந்த சூழலில் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எனவே ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கணிப்பொறி உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »