Press "Enter" to skip to content

நீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும்- சீமான் பேட்டி

நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு போராடினால் பெரும் எழுச்சியை கொண்டு வரமுடியும் என்று சீமான் கூறியுள்ளார்.

பூந்தமல்லி:

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சின்னபோரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

நீட் தேர்வை தடுக்க முடியும். வடமாநில மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து எழுதி தேர்வு பெறுகிறார்கள் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு போராடினால் பெரும் எழுச்சியை கொண்டு வரமுடியும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதிக்கின்றனர். தி.மு.க. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால் யாரிடம் சொல்லி நிறுத்துவார்கள். நீட் தேர்வால் மாணவர்களின் பெற்றோர், தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படும். அதற்காகத்தான் இந்த கொள்கையை எடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »