Press "Enter" to skip to content

438 நாள்களுக்கு பின் களமிறங்கிய முதல் பந்தில் அவுட்- ரீ வியூ சென்று மீண்ட டோனி

438 நாள்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட் விளையாட வந்த டோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

அபுதாபி:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.

அபிதாபியில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இறுதியில்  5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் ஏழாவது பேட்ஸ்மேனாக 438 நாட்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட் விளையாட வந்த டோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பும்ரா வீசிய அந்த பந்து டோனிக்கு இடது பக்கமாக சென்று கீப்பர் டி காக்கை அடைந்தது. அதற்கு மும்பை வீரர்கள் அப்பீல் செய்ய, அம்பயர் ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனடியாக அவுட் கொடுத்தார்.

உடனே எதிர்முனையில் நின்று கொண்டிருந்த டுபிளசிஸிடம் தெரிவித்த டோனி, அம்பயரின் முடிவை எதிர்த்து ரீவ்வியூ சென்றார்.

அதில் டோனியின் பேட்டில் பந்து படவே இல்லை என தெரிந்ததும்தொலைக்காட்சிஅம்பயர் களத்தில் நின்று கொண்டிருந்த அம்பயரின் முடிவை பின்வாங்கிக் கொள்ளும்படி தெரிவிக்க, நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார் டோனி.

டிஆர்எஸ் முறையை டோ ரிவிவிவ் சிஸ்டம் என அவரது ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள். அப்படி, டோனியின் கணிப்பு மற்றொரு முறை தவறாமல் இருந்துள்ளது என அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »