Press "Enter" to skip to content

86 ரன்னுக்குள் 4 மட்டையிலக்கு: 54 பந்தில் 131 ரன்களை எடுத்து சிஎஸ்கே வெற்றி பெறுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மளமளவென மட்டையிலக்குடுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நெருக்கடியை சந்தித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 217 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த சுற்றில் முரளி விஜய் 21 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 சுற்றில் 58 ஓட்டங்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு மட்டையிலக்குடுகளை இழந்துள்ளது. ஐந்தாவது மட்டையிலக்குடுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 11 சுற்றில் முடிவில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 86 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இன்னும் 54 பந்தில் 131 ஓட்டங்கள் தேவை. இந்த ஜோடியும், எம்எஸ் டோனியும் அதிரடியாக விளையாடினால் சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. இருந்தாலும் ஓவருக்கு சராசரியாக 14.56 ஓட்டங்கள் தேவை என்பதால் கடினம்தான்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »