Press "Enter" to skip to content

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கடந்த 6 மாதத்தில் 13,410 புகார்கள் வந்துள்ளது – ஸ்மிருதி இரானி தகவல்

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கடந்த 6 மாதத்தில் 13,410 புகார்கள் வந்துள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் குறித்து மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில்,

கடந்த மார்ச் 1, 2020 முதல் செப்டம்பர் 18, 2020 வரையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான 13,410 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வாட்ஸசப் மூலம் 1,443 புகார்கள் பெறப்பட்டது.

இதில், 4,350 புகார்கள் வீட்டு வன்முறைக்கு எதிரான பெண்களைப் பாதுகாத்தல் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக  உத்தரபிரதேசத்தில் 968 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் அறிவித்த பிறகு, தேசிய பெண்கள் ஆணையம் சார்பாக வீட்டு வன்முறை வழக்குகளைப் புகார் அளிப்பதற்காக ஏப்ரல் 10 ஆம் தேதி ஒரு வாட்ஸ்அப் எண் – 7217735372 ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »