Press "Enter" to skip to content

மும்பைக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

அபு தாபியில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2020 சீசனின் 5-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7.00 மணிக்கு சுண்ட்ப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. குருணால பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. பும்ரா, 8. பேட்டின்சன், 9. பும்ரா, 10. சவுரப் திவாரி. 11. ராகுல் சாஹர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சுனில் நரைன், 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. அந்த்ரே ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. நிகில் நாய்க், 8. பேட் கம்மின்ஸ், 9. குல்தீப் யாதவ், 10. சந்தீப் வாரியார், 11. ஷிவம் மவி.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »