Press "Enter" to skip to content

மும்பை இந்தியன்ஸ் 10 சுற்றில் ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 94 ஓட்டங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் 10 ஓவர் முடிவில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 94 ஓட்டங்கள் அடித்துள்ளார்.

அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக் – ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை சந்தீப் வாரியார் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரோகித். இதனால் மும்பை முதல் சுற்றில் 8 ஓட்டங்கள் எடுத்தது.

2-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குயின்டான் டி காக் ஒரு ஓட்டத்தை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது மட்டையிலக்குடுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அத்துடன் அந்த ஓவரை மெய்டனாக்கினார் ஷிவம் மவி.

3-வது ஓவரை சந்தீப் வாரியார் வீசினார். இந்த சுற்றில் சூர்யகுமார் யாதவ் நான்கு பவுண்டரிகள் விளாசினார். இந்த சுற்றில் மும்பை 16 ஓட்டங்கள் அடித்தது.

அடுத்த ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த சுற்றில் பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் 9 ஓட்டங்கள் சேர்த்தது. 5-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இநத சுற்றில் ரோகித் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார்.

சுனில் நரைன் வீசிய 6-வது சுற்றில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரி விளாச மும்பை இந்தியன்ஸ் பவர் பிளே-யில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 59 ஓட்டங்கள் அடித்தது.

அந்த்ரே ரஸல் வீசிய 7-வது சுற்றில் ரோகித் சர்மா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்தார். 8-வது சுற்றில் சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸ் அடித்தார்.

9-வது சுற்றில் சுனில் நரைன் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 10-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த சுற்றில் மும்பை 6 ஓட்டங்கள் அடித்தது. இதனால் 10 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 94 ஓட்டங்கள் அடித்துள்ளது. ரோகித் சர்மா, சூரயகுமார் யாதவ் தலா 45 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »