Press "Enter" to skip to content

2025-ம் ஆண்டில் வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

2025-ம் ஆண்டில் வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் ‘மங்கள்யான்’ திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2 திட்டங்களையும் மேற்கொண்டது.

அதைத்தொடர்ந்து, வெள்ளி 2கிரகத்தின் மீது இஸ்ரோவின் பார்வை பதிந்துள்ளது. வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

வருகிற 2025-ம் ஆண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதில், பிரான்சும் பங்கேற்கிறது.

இந்த தகவலை பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சி.என்.இ.எஸ். தெரிவித்தது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில் முதல்முறையாக பிரான்ஸ் இடம்பெறுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரோ தலைவர் கே.சிவனும், சி.என்.இ.எஸ். தலைவர் ஜீன் யீவ்ஸ் லீ காலும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே எந்தெந்த வகையில் ஒத்துழைப்பு நிலவ செய்யலாம் என்று விவாதித்தனர். ஆனால், இதுகுறித்து ‘இஸ்ரோ’ தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டில், விண்வெளிக்கு 3 இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் ‘ககன்யான்’ திட்டத்திலும் பிரான்ஸ் பணியாற்றி வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »