Press "Enter" to skip to content

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

வாஷிங்டன்:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபங்களின் ஒளியைப் போற்றும் வகையில் மண் விளக்குகளை கொண்டு தீபங்களை ஏற்றி ஒளியை பரவ செய்து கொண்டாடும் இந்த விழாவில் மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்தகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒளியின் திருவிழாவைக் கொண்டாடும் கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துக்கள்.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு மருத்துவர் ஜில் பைடன் உடன் சேர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்களுடைய புது ஆண்டில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைய எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசும், உலகம் முழுவதும் கொண்டாடும் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »