Press "Enter" to skip to content

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவி ஏற்கும் முதல் நாளில் அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இணையும் என ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.

வாஷிங்டன்:

கடந்த 3-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் சீனா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேசமயம் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அமெரிக்கா-சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.

அதே போல் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சீனாவுடனான உறவு குறித்தும் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையுமா என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜோ பைடன் பதில் அளித்து பேசியதாவது:-

சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும்.

அதேபோல் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவது உறுதி. நான் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேர போகிறோம். அதேசமயம் அதில் சில சீர்திருத்தங்களும், ஒப்புதல்களும் தேவைப்படுகிறது. அதேபோல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும் இணையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »