Press "Enter" to skip to content

இன்னும் 2 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவர் புயலின் மையப்பகுதி இன்னும் 2 மணி நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.

சென்னை:

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.

நிவர் புயலின் தற்போதைய நிவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-

அதிதீவிர நிவர் புயல் வங்கக்கடலில் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

அதேபோல் புயல் சென்னையில் இருந்து தெற்கே-தென்மேற்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புயலின் மையப்பகுதி கடந்த 6 மணி நேரமாக 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.

நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை அருகே அடுத்த 1 முதல் 2 மணி நேரத்தில் (நள்ளிரவு 2 மணி முதல் 3 மணியளவில்) கரையை கடக்கும். 

அப்போது புயல் காரணமாக காற்றின் வேகம் 120 முதல் 130 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »