Press "Enter" to skip to content

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் தீவிர அடைமழை (கனமழை) – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய தீவிர அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தற்போது புதிய தகவல் வெளியிட்டுள்ளது. 

அதில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய தீவிர அடைமழை (கனமழை) பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »