Press "Enter" to skip to content

94.1 சதவிகித செயல்திறன் – தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்த மாடர்னா

இறுதிகட்ட பரிசோதனை முடிவுகளில் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.1 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளது என தெரியவந்துள்ளது.

வாஷிங்டன்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மாடர்னா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முழுமையான இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மாடர்னா கொரோனா தடுப்பூசி 94.1 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என உறுதியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான தகவல் என்னெவென்றால் இந்த தடுப்பூசியால் எந்தஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

மேலும், இந்த தடுப்பூசி கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது. மொத்தம் 30 ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட இறுதிகட்ட பரிசோதனையின் மூலம் தடுப்பூசி 94.1 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என்ற இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி 94.1 சதவிகித செயல்திறன் கொண்டுள்ளது என்பது உறுதியானதையடுத்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளிக்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. 

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எஃப்டிஏ-விடமும், ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறையிடமும் தங்கள் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு மார்டனா விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்காவில் மார்டணா தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் குறித்து எஃப்டிஏ அமைப்பு வரும் 17-ம் தேதி கூட்டம் கூடி முடிவெடுக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளிக்கும் பட்சத்தில் உடனடியாக டிசம்பர் மாதமே தடுப்பூசி அமெரிக்க மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 95 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவரசகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்ககோரி அந்நிறுவனமும் அமெரிக்க அரசிடம் விண்ணப்பத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »