Press "Enter" to skip to content

நிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத அடைமழை (கனமழை) எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் புயலாக மாறி இலங்கை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனால் கடலூர், சென்னை உள்பட பல மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இது புயலாக மாற இருக்கிறது. இதனால் தென்தமிழகத்தில் அதீத அடைமழை (கனமழை) பெய்ய வாய்புள்ளதாக வானிமை மையம் எச்சரித்தது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அதன்பின் புயலக உருவெடுத்து நாளைமறுநாள் (டிசம்பர் 2-ந்தேதி) மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கு 1040 கி.மீட்டர் தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வாக நிலைகொண்டுள்ளது. திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 640 கி.மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுப்பெறும் எனவும், அதற்கடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் டிசம்பர் 2 மற்றும் 3-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »