Press "Enter" to skip to content

ஐதராபாத் தேர்தல்: ஒவைசி கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக – முடிவுகள் அறிவிப்பு

150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 146 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

வாக்குச்சீட்டு முறைபடி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. ஆனாலும், பெரும்பாலான வார்டுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

150 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் பெரும்பான்மை பெற 76 வார்டுகளை கைப்பற்றவேண்டும்.

இந்நிலையில், 150 வார்டுகளில் 146 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 வார்டுகளில் 146 வார்டுகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி,

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 56 வார்டுகளில் வெற்றி

பாஜக – 46 வார்டுகளில் வெற்றி

அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) – 42 வார்டுகளில் வெற்றி

காங்கிரஸ் – 2 வார்டுகளில் வெற்றி

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், அசாதுதீன் ஒவைசி-யின் எஐஎம்ஐஎம் கட்சியை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் எஐஎம்ஐஎம் கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்:-

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 99

எஐஎம்ஐஎம் – 44

பாஜக – 4 

காங்கிரஸ் – 2

தெலுங்கு தேசம் – 1

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »