Press "Enter" to skip to content

நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.

சென்னை:

வங்கக் கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டனர். மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நிவர் புயல் சேதங்களை கணக்கிட நவம்பர் 30-ம் தேதி மத்திய குழு தமிழகம் வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போனது.

இந்நிலையில், நிவர் புயல் சேதங்களைக் கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »