Press "Enter" to skip to content

இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்திய – துராஜ்நாத் சிங் பெருமிதம்

சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார்.

லக்னோ:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன படைகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தன. அப்போதெல்லாம், இந்திய ராணுவம் துணிச்சலோடு எதிர்கொண்டு, சீன படைகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வந்தது. எந்த நிலையிலும், நிலை குலைந்து போகாமல் இந்திய ராணுவம் துணிச்சலாக நின்றது.

தற்போது அங்கு போர் பதற்றம் நிலவி வந்தாலும், எந்த நிலையையும் எதிர்கொள்ளும் தயார் நிலையில் இந்திய ராணுவம் உள்ளது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் புதிய ராணுவ ஆஸ்பத்திரி கட்டுவதற்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் எல்லையில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் குறித்து பெருமிதத்துடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய ராணுவத்தின் கவர்ந்திழுக்கும் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தி பிடிக்க உதவியது.

அது மட்டுமின்றி நாட்டு மக்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் வழிவகுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது பேச்சைக்கேட்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »