Press "Enter" to skip to content

2017-ல் ஆராய்ச்சியின் போது வௌவ்வாலிடம் கடி வாங்கிய வுகான் வைராலஜி விஞ்ஞானி – தற்போது வெளியாகும் தகவல்

2017-ம் ஆண்டில் வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான ஆராய்சிக்காக ஒரு குகையில் உள்ள வௌவ்வாலாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க சென்றுள்ளனர்.

பிஜீங்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வௌவ்வால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவ்வாலிடம் கடி வாங்கிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெய்லி மெயில் மற்றும் டெய்லி விண்மீன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவ்வால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார். சார்ஸ் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவ்வாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர்.

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆராய்ச்சிளர் சியூ ஜியி என்ற அந்த குகையில் பிடித்த ஒரு வௌவ்வாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது சியூ ஜியி தனது கையில் பிடித்து வைத்திருந்த வௌவ்வால் அவரை கடித்துள்ளது. கையுறை அணிந்திருந்த போதும் வௌவ்வாலின் அந்த கடி ‘ஊசி குத்தியது’ போல இருந்தது என அவர் கூறியுள்ளார்.

வௌவ்வால் கடித்ததையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு சென்றபோது அந்த குழுவினர் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடை அணியவில்லை. சாதாரண உடை மற்றும் கையுறை மட்டுமே அணிந்து சென்றுள்ளனர்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ள நிலையில் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக வெளியான இந்த புகைப்படம் மற்றும் காணொளி சமூக வலைதளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »