Press "Enter" to skip to content

கொல்கத்தாவில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புதுடெல்லி:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த நாளை துணிச்சல் தினமாக (பராக்கிரம் திவாஸ்) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய மந்திரி பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்கிறார். நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மோடி கவுரவிக்கிறார்.

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »