Press "Enter" to skip to content

பழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை – மைய கட்டுப்பாட்டு வங்கி

பழைய 100, 10, 5 ரூபாய் தாள்களின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி:

மங்களூருவில் மாவட்ட வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மைய கட்டுப்பாட்டு வங்கியின் துணைப் பொது மேலாளர் பி மகேஷ் கூறுகையில்,  மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் மைய கட்டுப்பாட்டு வங்கி பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் தாள்களை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதால் அவை புழக்கத்தில் இருக்காது என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்களும் வியாபாரிகளும் அந்த நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இது மற்ற வங்கிகளுக்கும் மைய கட்டுப்பாட்டு வங்கிக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் தேங்கி கிடக்கின்றன என்றார். 

10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறப்படுவது ஒரு வதந்தி என்பதை வங்கிகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும். ரூ.10 நாணயத்தை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொண்டு வருவதற்கான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். 

இந்நிலையில், பழைய 100, 10, 5 ரூபாய் தாள்களின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »