Press "Enter" to skip to content

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான வழக்கு திரும்பப்பெற- எடப்பாடி பழனிசாமிக்கு ஜிகே வாசன் பாராட்டு

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு ஜிகே வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட 11.43 லட்சம் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூ. 1,117 கோடி இடுபொருள் நிவாரணம் விவசாயிகளின் நண்பன் தமிழக முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 7,898 பேர் மீதான அனைத்து நடவடிக்கைகளும் திரும்ப பெறப்படுவதால் அவர்கள் மனநிம்மதியோடு பணிக்கு செல்வார்கள்.

அதே போல அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 12, 483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது அவர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ. 7,700 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் மாதந் தோறும் ஊதியமாக ரூ. 10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படி தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு எடுக்கின்ற விவசாய நலன் சார்ந்த, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »