Press "Enter" to skip to content

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம்- ஆளுநர் புகழாரம்

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் கூறியதாவது:

கொரோனா பெருந்தொற்று மீட்புப் பணிகளில் அயராது உழைத்த சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பங்களிப்பிற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது. பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று, வெற்றி நடை போடுகிறது தமிழகம். முதல்-அமைச்சரின் தன்னிகரற்ற தலைமையின் கீழ், சிறப்பாக செயல்படும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »