Press "Enter" to skip to content

இந்தாண்டு இறுதிக்குள் விண்வெளி பயணம் திட்டம் தொடக்கம் – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

அனைவரும் விண்வெளிக்கும் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

வாஷிங்டன்:

விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் குறுங்கலத்தில் அனுபவம் வாய்ந்த விமானி ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இந்த திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் இந்த 4 பேருக்கும் பால்கன் ரொக்கெட் மற்றும் டிராகன் குறுங்கலத்தில் தேவையான பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் விண்வெளி செல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களின் கனவு நிறைவேறும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »