Press "Enter" to skip to content

பிரதமர் மோடி சுயசார்புக்கு பயன்படுத்துகிற ‘ஆத்மநிர்பார்தா’ வார்த்தைக்கு புதிய அங்கீகாரம்

ஆத்மநிர்பார்தா என்ற வார்த்தையை 2020-ம் ஆண்டின் இந்தி வார்த்தையாக தேர்வு செய்து புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நமது நாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஆளும் பா.ஜ.க.வினரால் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தையாக ‘ஆத்மநிர்பார்தா’ மாறி உள்ளது.

முழுமையாக சொல்வதென்றால் ஆத்மநிர்பர்பார்தா என்றே சொல்ல வேண்டும்.

இது சுயசார்பு இந்தியாவை குறிக்கிறது.

2020-ம் ஆண்டின் இந்தி வார்த்தையாக தேர்வு ஆக்ஸ்போர்டு மொழிகள் நிறுவனத்தின் சார்பில், இந்த ஆத்மநிர்பார்தா என்ற வார்த்தையை 2020-ம் ஆண்டின் இந்தி வார்த்தையாக தேர்வு செய்து புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தையை தேர்வு செய்தது, ஆக்ஸ்போர்டு மொழிகள் ஆலோசனைக்குழுவை சேர்ந்த மொழி வல்லுனர்களான கிருத்திகா அகர்வால், பூனம் நிகாம் சஹாய், இமோஜென் பாக்சல் ஆகியோர் ஆவார்கள்.

நெறிமுறைகள், மனநிலை அல்லது ஆர்வங்களை பிரதிபலிக்க தேர்வு செய்யக்கூடிய ஒரு சொல் அல்லது வெளிப்பாடு ஆக ஆத்மநிர்பார்தா என்னும் இந்த இந்தி வார்த்தை உள்ளது.

கொரோனா பெருந்தொற்று நோயின் அபாயங்களை கையாண்ட மற்றும் தப்பிப்பிழைத்த எண்ணற்ற இந்தியர்களின் அன்றாட சாதனைகளை உறுதியப்படுத்தியதால்தான் இந்த வார்த்தை, 2020-ம் ஆண்டின் இந்தி வார்த்தையாக ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளது,

இந்த வார்த்தையை கடந்த ஆண்டின் இந்தி வார்த்தையாக தேர்வு செய்திருப்பது குறித்து ஆக்ஸ்போர்டு மொழிகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோயின் ஆரம்ப மாதங்களில், இந்தியாவில் கொரோனா நிவாரண திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அப்போது ஒரு நாடு பொருளாதாரம், சமூகம் மற்றும் தனிநபர்கள் சுய சார்பு அடைய வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் உரையை தொடர்ந்து ஆத்மநிர்பார்தா என்ற வார்த்தையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் பொது அகராதியில் ஒரு சொற்றொடராகவும், கருத்தாகவும் இருந்து, அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »