Press "Enter" to skip to content

திருச்செந்தூர் முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி பார்வை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி பார்வை செய்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் பிரம்மசக்தி உள்ளிட்ட 2 பெண்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் காரில் வந்தார்.

அவரை கோவில் பட்டர்கள் சிலர் வரவேற்றனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் மின்கலவடுக்கு (பேட்டரி) காரில் ஏறி கோவில் நுழைவு வாயிலுக்கு சென்றனர்.

அங்கிருந்து கோவிலுக்குள் வி.ஐ.பி.கள் செல்லும் வழியில் அவர்களை பட்டர்கள் அழைத்து சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மூலவர் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது. மூலவரை கண்களை மூடி நின்று பயபக்தியுடன் துர்கா ஸ்டாலின் சாமி தரினம் செய்தார். பட்டர் கொடுத்த விபூதியை துர்கா ஸ்டாலின் நெற்றியில் பூசிக் கொண்டார்.

அவருக்கும் உடன் வந்திருந்தவர்களுக்கும் பட்டர்கள் பிரசாதம் வழங்கினர். அங்கிருந்து கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் அவர் சென்று வழிபாடு நடத்தினார். கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு அவர் பகல் 12.30 மணிக்கு வெளியே வந்தார். நுழைவு வாயிலில் இருந்து மீண்டும் மின்கலவடுக்கு (பேட்டரி) காரில் ஏறி வெளியே சென்றார். அதிலிருந்து இறங்கிய அவர், காரில் ஏறி திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »