Press "Enter" to skip to content

கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர் அறிவிப்பு

கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனமுதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

வேலூர்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் இன்று அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்பட்டார்.

கிருபானந்த வாரியார், 1993ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »